Tuesday, September 10, 2013

உலக வர்த்த்க மையம்-7 க்கு என்ன நேர்ந்தது?

உலக வர்தக மைய இடிப்பு சம்பவங்களிச் நீங்கள் அறிய வேண்டியது WTC-7 என்னும் 47 மாடிகளை கொண்ட ஒரு அமைப்பை பற்றி தான்.   610 அடி (190 மீட்டர்) உயரம் கொண்ட இந்த அமைப்பு உலக வர்த்தக மையத்தின் ஒரு பகுதி. 1981 இல் துவக்க்ப்பட்ட இக்கட்டிடவேலைகள் 1983-ல் முடிந்தன. மார்ச் 1983 ல் இக்கட்டிடம்  துவக்கப்பட்டது. 

செப்டம்பர் 11, தாக்குதலில் இக்கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. நினைவில் கொள்ளுங்கள், இக்கட்டிடத்தில் எந்த விமானமும் மோத வில்லை. இந்த கட்டிடமானது வடக்கு டவரில் இருந்து 300 மீட்டர் தொலைவி இருந்தது. அந்த 110 மாடிகள் கொண்ட அவ்வடக்கு டவர் இடிந்த பொது, அதன் இடிபாடுகள் WTC-7 கட்டிடத்தின் தெற்க்குப் பக்க சுவர்களின் மீது விழுந்து பலத்த சேதத்தை உண்டாக்கின. மேலும் 7 முதல் 17 வரை உள்ள மாடிகளின் தென்மேற்க்கு  மூலையில் பலத்த சேதத்தை உருவாக்கின.  மேலும் அப்பொது உருவான தீ அக்கட்டிடத்தில் உள்ள மரப்பொருட்களை எரித்தது.  தானியங்கி தீயனைப்பு கருவியில் ஏற்பட்ட கோளாரால் தீயை அனைக்க முடியவில்லை. படிப்படியாக தீயின் அளவு அதிகரித்து செப்டம்பர் 11, மாலை 5:20:33 அளவில் இக்கட்டிடம் சரியத் தொடங்கியது. 37 வினாடிகளில் அதாவது மலை 5:21:10 மணி அளவில் இக்கட்டிடம் முழுவதும்மாக இடிந்து விழுந்தது. 

உலக வர்த்தக மைய இடிப்பு சம்பவங்களின் சர்ச்சைகள் ஏற்பட இக்கட்டிட இடிப்பு மிகப்பெரிய காரனமாக அமைந்தது

No comments:

Post a Comment