வடக்கு டவர் 110 மாடிகளை கொண்ட ஒரு மிக உயரமான அமைப்பாகும். இது 1972-ல் கட்டி முடிக்கபட்டது. அப்பொழுது அதன் உயரம் 1,368 அடிகள் (417 மீட்டர்கள்). அக்காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக இது 2 ஆண்டுகள் இருந்தது. பின்னர், 1978 வாக்கில் 110 மீட்டர் உயரமுள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் நிறுவப்பட்டன.
விமான கடத்தல்காரர்கள் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்-11 விமானத்தை கடத்தி காலை 8:46 மணி அளவில் உலக வர்த்தக மைய்யத்தின் வடக்கு கட்டிடத்தில் மோதுகிறார்கள். அவ்விமானம் 93-99 ஆம் மாடிகளின் இடையே கட்டிடத்தின் வடக்கு பக்கத்தில் மோதுகிறது. விமானம் மோதிய இடத்திற்கு மேல உள்ள மாடிகளில் இருந்த 1344 பேர் கீழே வருவதற்கான வழிகள் அனைத்தும் விமானம் மோதியதால் அழிந்து விட்டன. விமானம் மோதியதும் அதில் இருந்த எரிபொருள் அனைதும் வெளியேறி கட்டிடம் முழுவதும் தீபற்றி எரிந்தது. 102 நிமிடங்க எரிந்த அக்கடிடம் காலை 10:28 மணி அளவில் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது.
No comments:
Post a Comment