Tuesday, September 10, 2013

உலக வர்த்த்க மையம்-7 மற்றும் மறைக்க பட்ட உண்மைகளும்

உலக வர்த்தக மைய இடிப்பு சம்பவங்களின் சர்ச்சைகள் ஏற்பட இக்கட்டிட இடிப்பு மிகப்பெரிய காரனமாக அமைந்தது. சர்சையாளைகை குறிப்பிட்ட சில காரணங்களை கீழே காண்போம்.

1.  இக்கட்டிடமானது விமானத்தால் தாக்கப்படவில்லை. மேலும் இரட்டை கோபுரங்களில் இருந்து விழுந்த இடிப்பாடுகள் தான் இக்கட்டிடதை சேதப்படுத்தின. மேலும் அவைகளே தீயை உருவாக்கின.

2. உலகில் எந்த ஒரு கட்டிடமும் இதுவரை தீ பிடித்து எரிந்து முழுவதுமாக் இடிந்ததில்லை.

3. கட்டிடம் இடிந்த சில நாட்களில் அமெரிக்க வானிலை மையம் அவ்விடதை ஆய்வு செய்த போது 1320 செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்ததாக சொன்னது. இக்கட்டிடத்திமன் மீது விமானங்கல் மோதவில்லை எனவே விமான எரிப்பொருள் அக்கட்டிடங்களின் மீது படவில்லை. மேலும், கட்டிங்களில் இருந்த மரப்பொருட்கள் இவ்வளவு அதிகப்பட்ச வெப்பனிலையை உருவாக்க வைப்பு இல்லை. எனவே, இக்கட்டிடம் இடிக்க வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன என சந்தேகிப்பட்டது. ஏனெனில், இவ்வளவு உயர்ந்த அளவிலான வெப்பம் வெடிப்பொருட்களாலே உருவாக்கபடும்.

4. இச்சம்பவம் உலக பார்வையில் இருந்து மறைக்க்பாட்டது. இக்கட்டிட இடிபாடு குறித்து மிக சில கானொளிகளே இனையத்தில் உள்ளன.

5. ஜேம்ஸ் க்லாஞ் என்ற FEMA ஆராய்ச்சியாளர் இக்கட்டிதிலிருந்த உருகிய எஃகு வை கொண்டு ஆராய்ந்ததில், அது அதிக்கப்படியான துளைகலுடன் ஒரு சுவிஸ் சீசை போல இருந்ததாகவும், அத்துளைகள்  எஃகு உருகியாதால் ஏற்பட்டதாகவும், மேலும் இக்கட்டிதில் இருந்த பொருட்கள் மூலம் உருவாகிய வெப்பம் எஃகுவை உருக்கும் அளவில் இருக்காது என்று வாதிட்டார். மேலும் அவர் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புகளின் மூலமாகவே  WTC-7  தரைமட்டமாகப்ப்ட்டதாக் தெரிவிதார்.

6. மேலும், இக்கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்த உருகிய எஃகு, அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட 9/11 விசாரனை கமிட்டி தனது விசாரனையை தொடங்குவத்ற்கு முன்பே துண்டாக வெட்டப்பட்டு, தென் சீனா-வுக்கு கப்பல்களின் மூலமாக அனுப்பப்பட்டது.

உலக வர்த்த்க மையம்-7 க்கு என்ன நேர்ந்தது?

உலக வர்தக மைய இடிப்பு சம்பவங்களிச் நீங்கள் அறிய வேண்டியது WTC-7 என்னும் 47 மாடிகளை கொண்ட ஒரு அமைப்பை பற்றி தான்.   610 அடி (190 மீட்டர்) உயரம் கொண்ட இந்த அமைப்பு உலக வர்த்தக மையத்தின் ஒரு பகுதி. 1981 இல் துவக்க்ப்பட்ட இக்கட்டிடவேலைகள் 1983-ல் முடிந்தன. மார்ச் 1983 ல் இக்கட்டிடம்  துவக்கப்பட்டது. 

செப்டம்பர் 11, தாக்குதலில் இக்கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. நினைவில் கொள்ளுங்கள், இக்கட்டிடத்தில் எந்த விமானமும் மோத வில்லை. இந்த கட்டிடமானது வடக்கு டவரில் இருந்து 300 மீட்டர் தொலைவி இருந்தது. அந்த 110 மாடிகள் கொண்ட அவ்வடக்கு டவர் இடிந்த பொது, அதன் இடிபாடுகள் WTC-7 கட்டிடத்தின் தெற்க்குப் பக்க சுவர்களின் மீது விழுந்து பலத்த சேதத்தை உண்டாக்கின. மேலும் 7 முதல் 17 வரை உள்ள மாடிகளின் தென்மேற்க்கு  மூலையில் பலத்த சேதத்தை உருவாக்கின.  மேலும் அப்பொது உருவான தீ அக்கட்டிடத்தில் உள்ள மரப்பொருட்களை எரித்தது.  தானியங்கி தீயனைப்பு கருவியில் ஏற்பட்ட கோளாரால் தீயை அனைக்க முடியவில்லை. படிப்படியாக தீயின் அளவு அதிகரித்து செப்டம்பர் 11, மாலை 5:20:33 அளவில் இக்கட்டிடம் சரியத் தொடங்கியது. 37 வினாடிகளில் அதாவது மலை 5:21:10 மணி அளவில் இக்கட்டிடம் முழுவதும்மாக இடிந்து விழுந்தது. 

உலக வர்த்தக மைய இடிப்பு சம்பவங்களின் சர்ச்சைகள் ஏற்பட இக்கட்டிட இடிப்பு மிகப்பெரிய காரனமாக அமைந்தது

தெற்கு டவரில். நடைப்பெற்ற நிகழ்வுகள்


தெற்கு டவர் 110 மாடிகளை கொண்ட ஒரு மிக உயரமான அமைப்பாகும். இது 1973-ல் கட்டி முடிக்கபட்டது. அப்பொழுது அதன் உயரம் 1,368 அடிகள் (417 மீட்டர்கள்). அக்காலத்தில் உலகின் 2வது  மிக உயரமான கட்டிடமாக இது இருந்தது. 

விமான கடத்தல்காரர்கள் யுனிடெட்  ஏர்லைன்ஸ்-175 விமானத்தை கடத்தி காலை 9:03 மணி அளவில் உலக வர்த்தக மைய்யத்தின் தெற்கு கட்டிடத்தில் மோதுகிறார்கள்.  அவ்விமானம் 77-85 ஆம் மாடிகளின் இடையே கட்டிடத்தின்  தெற்கு பக்கத்தில் மோதுகிறது.. விமானம் மோதியதும் அதில் இருந்த எரிபொருள் அனைதும் வெளியேறி கட்டிடம் முழுவதும் தீபற்றி எரிந்தது. 56 நிமிடங்கள் எரிந்த அக்கட்டிடம் காலை 9:59 மணி அளவில் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது.

வடக்கு டவரில். நடைப்பெற்ற நிகழ்வுகள்


வடக்கு டவர் 110 மாடிகளை கொண்ட ஒரு மிக உயரமான அமைப்பாகும். இது 1972-ல் கட்டி முடிக்கபட்டது. அப்பொழுது அதன் உயரம் 1,368 அடிகள் (417 மீட்டர்கள்). அக்காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக இது 2 ஆண்டுகள் இருந்தது.  பின்னர், 1978 வாக்கில் 110 மீட்டர் உயரமுள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் நிறுவப்பட்டன.  

விமான கடத்தல்காரர்கள் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்-11 விமானத்தை கடத்தி காலை 8:46 மணி அளவில் உலக வர்த்தக மைய்யத்தின் வடக்கு கட்டிடத்தில் மோதுகிறார்கள்.  அவ்விமானம் 93-99 ஆம் மாடிகளின் இடையே கட்டிடத்தின் வடக்கு பக்கத்தில் மோதுகிறது. விமானம் மோதிய இடத்திற்கு மேல உள்ள மாடிகளில் இருந்த 1344 பேர் கீழே வருவதற்கான வழிகள் அனைத்தும் விமானம் மோதியதால் அழிந்து விட்டன. விமானம் மோதியதும் அதில் இருந்த எரிபொருள் அனைதும் வெளியேறி கட்டிடம் முழுவதும் தீபற்றி எரிந்தது. 102 நிமிடங்க எரிந்த அக்கடிடம் காலை 10:28 மணி அளவில் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது.

செப்டம்பர் 11: நடந்தது என்ன?

செப்டம்பர் 11, 2001 இல் நடைப்பெற்ற நிகழ்குவுகளின் தொகுப்பு..

4 வர்த்தக பயனிகள் விமானகள் அல்-காயிதா அமைப்பை சேர்ந்த 19 பேர் கொண்ட குழுவால் கடத்தப்படுகின்றன. 

1. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 11

பாஸ்டன் நகரின் லொகான் விமான் நிலையத்தில் இருந்து 76 பயனிகளுடனும், 11 விமான பனியாளர்களுடனும் (5 கடத்தல்காரர்களை தவிர்த்து) காலை 7:59 மணி அளவியல் லாஸ் ஏஞ்சல் நகருக்கு புரப்படுகிறது. விமான கடத்தல்காரர்கள் அவ்விமானத்தை கடத்தி 8:46 மணி அளவில் உலக வர்த்தக மைய்யத்தின் வடக்கு கட்டிடத்தில் மோதுகிறார்கள்.


2. யுனிடெட்  ஏர்லைன்ஸ் விமானம் 175

பாஸ்டன் நகரின் லொகான் விமான் நிலையத்தில் இருந்து 51 பயனிகளுடனும், 9 விமான பனியாளர்களுடனும் (5 கடத்தல்காரர்களை தவிர்த்து) காலை 8:14 மணி அளவியல் லாஸ் ஏஞ்சல் நகருக்கு புரப்படுகிறது. விமான கடத்தல்காரர்கள் அவ்விமானத்தை கடத்தி 9:03 மணி அளவில் உலக வர்த்தக மைய்யத்தின் தெற்க்கு கட்டிடத்தில் மோதுகிறார்கள்.


3. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 77

வாஷிங்க்டன் நகரின் டல்லெஸ் சர்வதேச விமான் நிலையத்தில் இருந்து 53 பயனிகளுடனும், 6 விமான பனியாளர்களுடனும் (5 கடத்தல்காரர்களை தவிர்த்து) காலை 8:20 மணி அளவியல் லாஸ் ஏஞ்சல் நகருக்கு புறப்படுகிறது. விமான கடத்தல்காரர்கள் அவ்விமானத்தை கடத்தி 9:37 மணி அளவில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கட்டிடத்தில் மோதுகிறார்கள்.


4. யுனிடெட்  ஏர்லைன்ஸ் விமானம் 93

நியூயார்க் நகரின் நியூஆர்க் சர்வதேச விமான் நிலையத்தில் இருந்து 33 பயனிகளுடனும், 7 விமான பனியாளர்களுடனும் (4 கடத்தல்காரர்களை தவிர்த்து) காலை 8:42 மணி அளவியல் சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்கு புறப்படுகிறது. விமான கடத்தல்காரர்கள் அவ்விமானத்தை கடத்தி அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடதை இடிப்பதற்காக வாஷிங்க்டன் நோக்கி செலுத்துகிறார்கள்.  விமான பயனிகள் விமானத்தை  கடத்தல்காரார்களிடம் இருந்து மிட்க போராடிய பொழுது, கடத்தல்காரார்கள் விமானத்தின் கட்டுப்பாடை இழந்து, பென்னிசில்வேனியா நகரின், சாங்க்ஸ்விலே என்ற பகுதியில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயனம் செய்த அனைவரும் பலியானார்கள்

உலக வர்த்தக மையம்

உலக வர்த்தக மையம் பற்றி சில தகவல்கள்..

உலக வர்த்தக மையம் என்பது 7 கட்டிடங்களை கொண்ட ஒரு தொகுப்பாகும். அதில் 110 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரங்களும் (1&2),  மாரியோட்ட் உலக வர்த்தக மையம் 3) மற்றும் உலக வர்த்தக மையம் (4,5,6 &7) ஆகிய 7 கட்டிடங்களை கொண்ட தொகுப்பாகும். இந்த உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரின் டவுன்டவுன் பொருளாதார மாவட்டதின் மையப்பகுதியில் அமைந்திருந்தது. இக்கட்டிட தொகுப்புகள் கி.பி 1975-85 வாக்கில் கட்டப்பட்டன. இக்கட்டிடங்களை கட்டி முடிக்க 400 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. மொத்தம் 1.24 மில்லியன் சதுர மீட்டர் அலுவலக பரப்பளவு கொண்டது.